ட்ரெம்ப்ளின்ஸ் சிட்டோயன்ஸ் 2023

23 மே முதல் 24 ஜூன் வரை.
ஜனநாயகம், உரிமைகள், சகவாழ்வு, ஒற்றுமை, நகர்ப்புற மாற்றம், கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், இளைஞர்கள் மற்றும் பல.
கலந்துரையாடி விவாதித்து சிறப்பான லா கூர்நெவ் நகரை உருவாக்குவோம்

ஜீனெஸ்டிவலில் கூர்நெவியர்கள்: இளைஞர் தகவல் மையம் மற்றும் ஹவுட்ரெமோன்ட் கலாச்சார மையத்தின் முன்முயற்சியில் இளம் கூர்நெவியர்கள் ஏற்பாடு செய்த ஒரு கொண்டாட்டம்
மே 24 முதல் ஜூன் 24, 2023 வரையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சிப் பிரதிநிதிகள் பகுதி மக்களைச் சந்திப்பார்கள், இந்த சந்திப்பானது “லா கூர்நெவ் நகரில் நாம் ஒருவருக்கொருவர் எந்தளவு அதிகமாகப் பேசுகிறோமோ, அந்தளவு சிறப்பாகப் பழகுவோம்” என்ற கருத்தை வலியுறுத்தி நடைபெறுகிறது. இந்தக் கலந்துரையாடல் உங்களுக்கு அருகிலேயே நடைபெறும், நகரத்தின் அனைத்து சுற்றுப்புறங்களிலும் 30க்கும் மேற்பட்ட சந்திப்பு மையங்கள் இருக்கும்.
கடினமான COVID காலக்கட்டத்திற்குப் பிறகு, நாம் கூர்நெவியர் பொதுவாக்கெடுப்பைத் தொடங்கினோம், வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்காக CV சுயவிவரங்களைச் சேகரித்து வேலைபெறுவதற்குப் போராடினோம், மேலும், சமீபத்தில் ஓய்வுபெறும் வயதை 64 ஆக உயர்த்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். இப்போது, எங்களது கருத்துக்கணிப்பு மூலமாக, லா கூர்நெ வ் நகரில் தற்போதைய வாழ்க்கை நிலை மற்றும் எதிர்காலம் குறித்த உங்கள் எண்ணங்களைக் கேட்க விரும்புகிறோம்.
என்றும் மக்கள் பணியில்: அரசின் சமூகக் கட்டுப்பாடு கொள்கை இருந்தபோதிலும், நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்ததன் பொருட்டு, நகராட்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நாங்கள் வெற்றிபெற விரும்புகிறோம்.
லா கூர்நெவ் மக்கள் சிறந்ததொரு வாழ்க்கையை வாழ்வதை உறுதிசெய்ய விரும்புகிறோம்;
மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை விட ஒன்றுபடுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம்;
நாங்கள் இப்போது நமது நகரத்தின் இளைஞர்களுக்கு உதவ விரும்புகிறோம், அதனால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை லா கூர்நெவ் அரசும், மக்களும் உறுதிசெய்ய முடியும்;
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நமது நகரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற விரும்புகிறோம்;
சமூகத்தில் சமத்துவத்துக்காக நாங்கள் போராடுகிறோம், ஏனென்றால் நமது நாடு பிரதேச ரீதியான அநீதியால் பாதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஏற்கனவே நிறைய சாதித்துவிட்டோம். ஆனால் இன்னும் வெற்றிகரமான பாதையில் செல்வதற்கு, அனைத்து குடிமக்களுக்கும் ஊக்கமளிக்கும் அரசாக சேவை செய்வதற்கு உங்கள் தனிப்பட்ட லட்சியங்களும், கூட்டு லட்சியங்களும் எங்களுக்குத் தேவை.
Gilles Poux,
லா கூர்நெ வ் மேயர்