skip to Main Content

நகர நடவடிக்கை

ஜனநாயக வாழ்க்கை

நகரமானது தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், மக்களுடன் ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவும், நகரின் திட்டங்களில் பங்கேற்க அவர்களை அழைக்கவும் முயற்சிக்கிறது.

செயல்பாடு எந்தளவு உள்ளது? »

2020 ஆம் ஆண்டு முதல், லா கூர்நெவ் மக்கள், மேயர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையே “Comment ça va” (செயல்பாடு எந்தளவு உள்ளது?) என்ற வருடாந்திர கூட்டங்களை நடத்தி வருகிறது, இதில் விஷயங்கள் எவ்வாறு செயல்படுகிறது, எது சரியாகச் செயல்படவில்லை என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

கூர்நெவியர்களின் பொது வாக்கெடுப்பு

2021 ஆம் ஆண்டில், லா கூர்நெவில் ‘கூர்நெவியர்களின் பொது வாக்கெடுப்பு’ தொடங்கப்பட்டது: இது குடியிருப்பாளர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க்கும் வருடாந்திர வாக்கெடுப்பாகும். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய விஷயங்களை முன்மொழிந்தனர்.

கிராண்ட் சென்டர்-வில்லே குடிமக்கள் பயிலரங்கு

Atelier Citoyen 2021

லா கூர்நெவ் குடியிருப்பாளர்களுக்குத் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், நகர்ப்புற திட்டங்கள், பூங்காக்கள் அல்லது விளையாட்டுப் பகுதிகள் மறுமலர்ச்சி போன்ற திட்டமிடல் பணிகளில் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.

மாற்றம் முன்னேற்றத்தில் நமது நகரம்

நகரம் அதன் குடிமக்களுடன் இணைந்து மேம்பட்டு வருகிறது, புதிய பொது வசதிகள், புதிய மற்றும் புணரமைக்கப்பட்ட வீடுகள், எளிதில் பயன்படுத்தும் வகையிலான பொதுப் போக்குவரத்து ஆகியவற்றுடன் மாற்றமடைந்து மேலும் நிலையானதாக மாறுகிறது – இவை அனைத்தும் அதன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன.

விரைவான பயணத்திற்கு ஆறு வழிகள் நிலையம்

கொஞ்சம் கொஞ்சமாக, ஆறு வழிகள் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்குள்ளாக, புதிய மெட்ரோவின் 16,17 தடங்கள் கொண்டு வரப்படும். இதுT1 ரயில் பாதை, பல பேருந்து வசதிகள் இருக்கும் வழித்தடங்களில் அமைக்கப்படும்.
லா கூர்நெவ் முதல் நான்டெர்ரேவுக்குபயண நேரம்: 18 நிமிடங்கள்.

மிகவும் வளங்குன்றா நகரத்திற்கான பொது தோட்டங்கள்

லா கூர்நெவ் ஆனது குடியிருப்பாளர்கள் இயற்கையுடன் பிணைந்து இணக்கமாக வாழும் ஒரு நகரத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில், புதிய தோட்டங்கள் மற்றும் அதிகச் செடியினங்களை உருவாக்குவதற்குத் திட்டமிட்டு,2024 ஆண்டிற்குள் 2024 மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, ஒரு சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலான புவிவெப்ப ஆற்றலை நகரமானது பயன்படுத்துகிறது.

அனைவருக்குமான நகரமாக முன்னேறுகிறது

Centre-ville

இதற்கு முன்பு KDI தொழிற்சாலை இருந்த இடத்தில் புதிய நகர மையம் கொண்டு வரப்படும். 2028 ஆம் ஆண்டில், 1000க்கும் மேற்பட்ட வீட்டு வசதிகள், கடைகள், உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய புதிய பள்ளி வளாகம் மற்றும் பசுமையானதிறந்தவெளி ஆகியவற்றுடன் கூடிய புதிய சூழல் உருவாக்கப்படும்.

ஒரு புதிய பாப்காக் மாவட்டம்

Babcock

தற்போது RER B நிலையத்திலிருந்து ஒரு குறுகிய தூரத்தில் புதிய பாப்காக் சுற்றுப்புறமானது கட்டுமானப் பணியில்உள்ளது. இந்தப் புதிய சுற்றுப்புறத்தில், கலாசாரத்திற்குப் பெருமை சேர்க்கும், சினிமா மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான இடவசதிகளும் இருக்கும். இது சில பழைய தொழிற்சாலை கட்டிடங்களை ஓரளவு பாதுகாக்கும் விதத்தில் இந்தப் பகுதியில் வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்கள் இருக்கும்.

வாழ்க்கையை அனுபவித்து தழைத்தோங்கவும்

லா கூர்நெவ்குடியிருப்பாளர்கள் வாழ விரும்பும் இடமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். லா கூர்நெவ் ஆனது கலாச்சாரமும் மற்றும் விளையாட்டுகளும் அனைவராலும் அணுகக்கூடியதாகவும் குழந்தைகள் வளரவும் தழைத்தொங்கவும் முடியும் ஒரு நகரமாகும்.

ஊடகப் பணியிலும் நமது பங்கேற்பு!

LMCN à l'UNAOC

2021 ஆம் ஆண்டில், லா கூர்நெவ் ஆனது நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணியில் சேர்ந்தது. பாகுபாடு, போலிச் செய்திகள், வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக லா கூர்நெவ் இளைஞர்கள் போராடுவதற்குத் தேவையான கருவிகளை அவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். இதில் பத்திரிக்கையாளர்கள் தலைமையிலான தொடர்ச்சியான பயிலரங்குகளுக்குப் பிறகு, தங்கள் யோசனைகளையும் திட்டங்களையும் பல மூத்த ஐ.நா பிரதிநிதிகளிடம் வழங்குவதற்காக நியூயார்க்கிற்குப் பங்கேற்பாளர்கள் சென்றனர்.

எப்போதும் கொண்டாட வேண்டிய நேரம் இது!

La Courneuve Plage, Festival La Courneuve Square, Hors les Murs… ஒவ்வொரு ஆண்டும், லா கூர்நெவ் பல்வேறு அற்புதமான கலாச்சார நிகழ்வுகளை நடத்துகிறது, ஏனெனில் லா கூர்நெவ் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கேளிக்கைகளை ரசிக்கவும் கொண்டாடவும் தகுதியானவர்கள்!

அனைவருக்கும் அணுகக்கூடிய விதத்தில் கலாச்சாரம்

கலாச்சாரம் என்பது அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் – இது ஒரு அறிவொளி மிகுந்த சரியான மக்கள்தொகையை உருவாக்க உதவுகிறது. இசை, நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், பாரம்பரியம்… லா கூர்நெவ் கலாச்சாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் உறுதியாக உள்ளது.

பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகள்

ஒரு சாங்கமாகவோ அல்லது சுயாதீனமாக, தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ — மக்கள் எப்படி விரும்புகிறார்களோ அதன்படி தரமான விளையாட்டு நடவடிக்கைகளில் போட்டியாகவோ அல்லது வேடிக்கையாகவோ பங்கேற்க அனைவருக்கும் வாய்ப்பளிப்பது நகரத்தின் கடமைகளில் ஒன்றாகும்.

அனைவருக்கும் விடுமுறை

Eté à Trilbardou

Arcachon விரிகுடாவில் மீன்பிடிக்கச் செல்லலாம், பர்கண்டியில் குதிரைகளில் சவாரி செய்யலாம், லோயர்-அட்லாண்டிக் உப்புச் சதுப்பு நிலங்களில் உப்பளத் தொழிலாளர்களைச் சந்திக்கலாம், ஆடேவில் உள்ள நதி படகில் செல்லலாம் அல்லது இத்தாலியை சுற்றிப் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும், 3 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கும், முதியவர்களுக்கும் கோடை விடுமுறை வாய்ப்புகளை நகரம் வழங்குகிறது.

சிறியவர்களுக்காக கலை மற்றும் கலாச்சாரம்

Louvre à jouer

தனிப்பட்ட மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தலுக்குக் கலை மற்றும் கலாச்சாரக் கல்வி இன்றியமையாதது, எனவே சிறு வயதிலிருந்தே தொடங்குவது முக்கியம். நகரமானது கலைஞர்கள் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்களுடன் பல கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது, இதனால் ஒவ்வொரு கூர்நெவியர்களின் குழந்தையும் ஒவ்வொரு ஆண்டும், நர்சரி முதல் ஆரம்பப் பள்ளி வரை, ஒரு கலை மற்றும் கலாச்சாரத் திட்டத்தில் பங்கேற்க முடியும்.

உங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து போராடுங்கள்

செயல்முனைப்பு என்பது நகரத்தின் DNA. லா கூர்நெவ் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கும், உடல்நலம், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் உரிமைகளுக்கான அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் லா கூர்நெவியர்களின் தேவைகள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும் நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் போராடுகிறார்கள்.

சமத்துவமின்மை: மற்றொரு கொடிய வைரஸ்

லா கூர்நெவ் ஆனது நீண்ட காலமாக பிராந்திய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடி வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் உட்படுத்தப்படும் சமத்துவமற்ற நடத்தையைக் கண்டிக்கவும் நிராகரிக்கவும் HALDE (பிரெஞ்சு சம வாய்ப்புகள் மற்றும் பாகுபாடு எதிர்ப்பு ஆணையம்), “Atlas of Inequalities”, 2020 இல் குடியிருப்பாளர்களின் எதிர்ப்பு, மற்றும் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதியிடம் மேயரின் முறையீடுகள் மூலம் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.

பணிகளுக்காக போராடுகிறது

ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் விளையாட்டுகள், கிராண்ட் பாரிஸ் எக்ஸ்பிரஸ், நகர்ப்புற புதுப்பித்தல் மற்றும் புதிய நிறுவனங்களை நிறுவுதல் ஆகியவைக்குச் சீன்-செயிண்ட்-டெனிஸ் அதிக முதலீடு பெறும் பிரெஞ்சு துறைகளில் ஒன்றாகும். இருப்பினும், வேலையின்மை விகிதம் இன்னும் நாட்டில் மிக அதிகமாக உள்ளது.

இந்த நிலையை எதிர்கொண்டு, 2022 ஆண்டில் லா கூர்நெவ் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்தது. எனவே, நமது நகரம் வேலை தேடும் நமது மக்களின் CV களை சேகரித்துநிறுவனங்களுக்கு அனுப்பியது, இதனால் நிறுவனங்கள் கூர்நெவ்வியர்களை பணியமர்த்த முடியும்.

நம் குழந்தைகளுக்கு

Classe de Neige - 2021

நிர்வாகிகளின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அதே கல்வி வாய்ப்புகள் உழைக்கும் வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். ஆரம்பப் பள்ளியின் இறுதி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்கூல் ஸ்கை பயணங்கள், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சிறிய வகுப்பு அளவுகள் மற்றும் தளத்தில் மருத்துவச் சேவைகள் மூலம் இந்த இலக்கை அடைய நகரம் கடினமாக உழைத்து வருகிறது. பள்ளிகள் தங்கள் குடியரசு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், வெற்றிக்குத் தேவையான வழிகளைக் குழந்தைகள் அனைவரும் பெறுவதையும் உறுதி செய்வதற்காக நாங்கள் முழுக் கல்வி சமூகத்துடன் இணைந்து போராடுகிறோம்.

இளம் வயதினருக்கு வழி ஏற்படுத்தி தருதல்!

அதன் இளம் குடியிருப்பாளர்கள் தங்களின் கருத்துக்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை அறிய, இளைஞர்களுக்கு ஏற்றதாக அதன் நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்ய 2021 ஆண்டில், லா கூர்நெவ் ஆனது ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.

சுகாதாரம் என்பது ஒரு உரிமை

சுகாதார அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராடுவதற்காக, பராமரிப்புத் தேவைப்படும் அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பதற்காக லா கூர்நெவ் ஆனது ஒரு நகராட்சி சுகாதார மையத்தை நிறுவியது. அனைவருக்கும் தரமான பராமரிப்புக்கான சமமான அணுகலை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோளாகும். சுகாதார நெருக்கடியின் மத்தியில், CMS ஆனது நகரவாசிகளுக்கு சோதனையிடல் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியது.

குழந்தைகளின் உரிமை

கண்காட்சிகள், தடுப்பு முறை பயிலரங்குகள், குடியுரிமைக் கல்வி, பெற்றோர்-குழந்தைப் பயிலரங்குகள் மற்றும் ஊனமுற்றோர் விழிப்புணர்வு: குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படுவதையும் விரிவுபடுத்தப்படுவதையும் உறுதிசெய்ய இனம் சார்ந்த குழந்தைகள் மன்ற குழந்தைகளுடன் இணைந்து நகரம் செயல்படுகிறது.

உங்கள் வீட்டு வாசலிலேயே பொது சேவை பேருந்து

30 மே 2022 முதல், நகரம் லா கூர்நெவ் மொபைல் பேருந்தை ஆதரிக்கிறது: உங்கள் வீட்டு வாசலுக்குச் சமூக உதவி, உரிமைகள், குடும்பம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, வரிகள் மற்றும் பலவற்றின் நிர்வாக நடைமுறைகளில் உங்களுக்கு உதவ ஊழியர்களுடன் வரும் பேருந்தாகும்.

ஒற்றுமை மற்றும் சகவாழ்வு

லா கூர்நெவ் மக்கள் தங்கள் வாழ்க்கையின் சிரமங்களை எதிர்கொள்வதற்கும், ஒன்றுபட்டு வாழ்வதில் அவர்களின் பெருமையை வளர்ப்பதற்கும் உதவும் ஒற்றுமை நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு நகரம் எப்போதும் அதன் குடியிருப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

4000 வாழ்வு

லா கூர்நெவின் வரலாற்று வீட்டுத் திட்டங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 1962 இல் கட்டப்பட்ட 4000 வீடுகள் Mail de Fontenay இடிக்கப்படுவதன் மூலம் ஒரு இறுதி மாற்றத்திற்கு உட்படும். அங்கு வாழ்ந்த குடிமக்களின் வரலாற்றை பதிவு செய்வதானது அவர்களின் மற்றும் தோட்ட அங்கீகாரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. 2022 முதல், 4000 திட்டங்களின் குடியிருப்பாளர்கள் மற்றும் சங்கங்கள் தங்கள் கதைகள் மற்றும் சுற்றுப்புறத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர், இதனால் அவை பாதுகாக்கப்படும்.

Maisons pour tous

நகரின் இரண்டு Maisons pour tous(அனைவருக்கும் வீடுகள்) மையங்கள் மக்கள் ஒன்று கூடி கற்கவும், அதிகாரம் பெறவும், சுற்றுப்புறத்தை உயிர்ப்பிக்கவும் அனுமதிக்கின்றன. இங்கே நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம், இன்பப் பயணம் செய்யலாம், பிரெஞ்சு பாடநெறிகளை படிக்கலாம், நிர்வாக முறைசார்ந்தவைகளிலும் மற்றும் நடைமுறைகளிலும் உதவி பெறலாம் அல்லது உரையாடலாம். பரஸ்பர உதவி மற்றும் சகவாழ்வு இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கமாக உள்ளன.

அமைதி தினம்

பொதுவாக ஆதிக்கத்தினால் வழிநடத்தப்படும் உலகில், லா கூர்நெவ் அமைதிக்காக வாதிடத் தேர்ந்தெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நகரம் செப்டம்பர் 21 அன்று சர்வதேச அமைதி தினத்தை கொண்டாடுகிறது. உண்மையான உலகளாவிய நகரமான லா கூர்நெவின் பன்முகத்தன்மை மற்றும் உள்கலாச்சாரங்ககளை கொண்டாட இது ஒரு வாய்ப்பாகும்.

கூர்நெவியர்களின் சிறந்த வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது

Banquet des séniors

சுகாதார நெருக்கடி அதிக சமத்துவமின்மைக்கு வழிவகுத்த சூழலில், இப்போது தங்கள் உணவை வாங்க பல்பொருள் அங்காடிகளை மட்டுமே நம்பி உள்ள குடும்பங்களின் நிலைமைகள் சந்தைகள் மூடப்பட்டதால் மோசமாகின. லா கூர்நெவில், 2020 இல் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெற்றன

Solid’air de fête

டிசம்பரில், ஒருமைப்பாடு மாதத்திற்காக நகரம் ஒன்றிணைகிறது. இந்த சந்தர்ப்பத்தில், லா கூர்நெவ் மக்கள் ஒருங்கிணைந்து உணவு வழங்குதல், வீடற்றவர்களுக்கான உதவி, குடும்ப நடவடிக்கைகள் மற்றும் பனிச்சறுக்குகள் ஆகியவற்றில் பங்கேற்கலாம். எரிசக்தி மற்றும் அடிப்படைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், 2022 இல், 3 முதல் 15 வயது வரை உள்ள அனைத்து லா கூர்நெவ் மக்களுக்கும் €30 பரிசு வவுச்சர்களை வழங்க நகரம் முடிவு செய்தது.

Inauguration de la patinoire

ஆண்டு இறுதி விழாக்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில், சுவையான உணவு, வேடிக்கைகளுடன் புதிய நினைவுகளை உருவாக்க பனிச்சறுக்கு கால மாதத்தில் ஐஸ் ரிங்க் அமைக்கப்படும்.

Back To Top