skip to Main Content

பதிவு

16 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்க முடியாது.
புகைப்படம், பெயர், முதல் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட எந்த அதிகாரப்பூர்வ ஆவணமும்.
எடுத்துக்காட்டு: தேசிய அடையாள அட்டை, உயர்நிலைப் பள்ளி அட்டை, விட்டல் கார்டு ...
குடும்பப்பெயர், முதல் பெயர் மற்றும் கோர்னுவியென் முகவரி ஆகியவற்றை வழங்கும் எந்த ஆவணமும்.
எடுத்துக்காட்டு: வாடகை ரசீது, EDF விலைப்பட்டியல், முகவரி உறை, தங்குமிடம் சான்றிதழ் ...

வாக்களித்தல்

புவி வெப்பமயமாதலின் காரணமாக ஏற்படும் விளைவுகளை இன்று எவராலும் மறுக்க முடியாது. அவற்றைக் குறைப்பதற்கு, நமது சொந்த நகரம் உட்பட, ஒவ்வொரு மட்டத்திலும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம், வியாபாரம் மற்றும் தொழில்துறை இயங்கும் பகுதிகளில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத போதும் இரவில் வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை அறிவோம். இது பல்லுயிர் பெருக்கத்தின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மின்சாரத்தைச் சேமிப்பதற்காக, குடியிருப்பு அல்லாத பகுதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை தெரு விளக்குகளை அணைத்து வைப்பதற்கு நகர நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இருப்பினும், வெளிச்சம் இல்லாத பகுதிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது சிக்கல்களை ஏற்படுத்தலாம். நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும்?
2022 ஆம் ஆண்டு முதல், விளம்பரங்கள், குறியீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் இரவில் விளக்குகள் எரியக் கூடாது என்று பிரெஞ்சு சட்டம் கூறுகிறது. இருப்பினும், இந்த ஒழுங்குமுறை அனைத்துச் சமயங்களிலும் பின்பற்றப்படுவதில்லை, இதன் காரணமாகக் கணிசமான அளவு ஆற்றல் வீணடிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமடைதல் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுப்பதற்கும், ஒழுங்குமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும் வழிகள் உள்ளனவா என்பது குறித்து உள்ளூர் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Le Conseil Communal des Enfants de La Courneuve (லா கோர்னேவ் (La Courneuve) குழந்தைகள் நகரச் சபை) ஆனது லா கோர்னேவ்வில் "லிட்டர் மராத்தான்" என்னும் வருடாந்திர நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. குடியிருப்பாளர்கள் அந்த நாளில் பொது இடங்களைச் சுத்தம் செய்ய உதவுவதே அதன் கருப்பொருள் ஆகும். குப்பைகள் மற்றும் கழிவுகளைத் தரம் பிரித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இந்த நிகழ்வை வருடத்திற்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தலாமா என்று உள்ளூர் அதிகாரிகள் யோசித்து வருகின்றனர். இந்தத் தூய்மை பணியாற்றும் தினத்தில் ஈடுபட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும்?

முக்கியம்

உங்கள் விவரங்கள் மற்றும் துணை ஆவணங்கள் நகரத்தில் உள்ள ஒரு அதிகாரியால் சரிபார்க்கப்படும். ஒவ்வொரு வாக்கும் இரகசியமாக வைக்கப்படும், அவற்றை நகராட்சிப் பணியாளர்களால் பார்க்க முடியாது. அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த வாக்குகளின் முடிவு மட்டுமே கிடைக்கும்.

உங்கள் பதில்கள் பெயரிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, வாக்களிக்கும் முறையை உருவாக்கிய வெளிப்புற வழங்குநரால் மட்டுமே தனிப்பட்ட முடிவுகளை அணுக முடியும். வெளிப்புற வழங்குநர் தரவை குறியாக்கம் செய்ய கடமைப்பட்டுள்ளார், மேலும் அது குறித்து ஆலோசிக்கவோ அதை ஒருபோதும் வெளிப்படுத்தவோ மாட்டார்.

வாக்குகள் அக்டோபர் 14, சனிக்கிழமை, மதியம் 1 முதல் Maison de la Citoyenneté James-Marson, 33 Avenue Gabriel Péri என்னும் முகவரியில் பொதுவில் எண்ணப்படும். வாக்குகள் எண்ணப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Back To Top